பதிவு செய்த நாள்
06
ஜன
2025
10:01
கோவை; ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், 75வது ஆண்டுவிழா, ஆர்.எஸ்.புரம், பலிஜநாயுடு கல்யாண மண்டபத்தில், கோலாகலமாக துவங்கியது. ஆண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, காலை 5:00 மணிக்கு கணபதிஹோமம், 6:00 மணிக்கு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆவாஹனம், 6:30 க்கு மஹன்யாச ருத்ரஜபம், 8:00 மணிக்கு பாலக்காடு ராஜன் குழுவினரின் செண்டை மேளத்துடன், ஸ்ரீ அய்யப்ப சுவாமி திருவாபரணம், கங்கா தீர்த்தத்துடன் பலிஜநாயுடு கல்யாண மண்டபத்துக்கு, பக்தர்கள் சூழ எடுத்து வரப்பட்டது. காலை 10:00 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலியும், தீபாராதனையும் நடந்தது. காலை 11:00 மணிக்கு மஹா அன்னதானம் விமரிசையாக நடந்தது. நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். 11:30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் சவுமியா அபிஷேக்ராஜூவின் பக்தி பிரவாஹம் சொற்பொழிவும், மாஸ்டர் சாய்சமர்த் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, ராஜேஷ்வைத்யா குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.