சிவசக்தி பீடத்தில் குழந்தை வரம் வேண்டி கோமாதாவிற்கு வளைகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2025 10:01
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே குழந்தை வரம் வேண்டி கோமாதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிரமத்தில் உள்ள திரிபுரசுந்தரியம்மை சிவசக்தி பீடத்தில் கோமாதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்காக நடந்த இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் குழந்தை பாக்கியம் வேண்டி பசுவிற்கு தேவையான தவிடு, தீவனம், அன்னதானத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. பசுமாட்டை குளிப்பாட்டி கொம்பில் வளையல் அணிவித்தனர். இங்கு வழங்கும் பிரசாதத்தை உண்டால் சிவன் அருள் பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.