Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசக்தி பீடத்தில் குழந்தை வரம் ... திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சியா? திருப்பரங்குன்றம் கந்தர் மலையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
வடபழனி கோவில் அருகில் காரிய மண்டபம் தேவையா? முழுமையாக அகற்ற பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
10:01

பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது, லட்சக்கணக்கானோர் பல மணிநேரம் பல கி.மீ., துாரம் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் குளக்கரையில் காரிய மண்டம் ஒன்று அமைந்துள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள அங்கு முன்னோர்களுக்கு காரியம் செய்யப்படுகிறது. அங்கு காரியம் செய்ய, 60 ரூபாய் மட்டுமே, கட்டணமாக மக்களிடம் வசூலிக்க வேண்டும். கடந்த ஆட்சியின்போதே, அந்த இடத்தை அறநிலையத்துறை வசம் மாநகராட்சி ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அவர்கள், 5,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்தனர். இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல, உள்ளூர் ஆளுங்கட்சியினர் கைக்கு மாறியது. முன்பு அந்த கட்சியினர் வசூலித்தனர். தற்போது, ஆளுங்கட்சியினர் வசூலிப்பதாக பரவலான குற்றச்சாட்டு எழுகிறது. இது குறித்து எதிர்க்கட்சியினர் வடபழனி முழுதும் ‘போஸ்டர்’ அடித்து ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தவிர்க்க வேண்டும்: இதுகுறித்து, ஆன்மிகநல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது:  முன்னோர்களுக்கு ஓடும் நீர்நிலைகளின் கரையில் தான் காரியம் செய்ய வேண்டும். அல்லது வீடுகளில் செய்யலாம். புனிதமான கோவில் முகப்பில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடந்து செல்லும் பகுதியில் காரிய மண்டம் அமைத்ததே தவறு. அங்கு காரியம் செய்து முன்னோர்களுக்கு வழங்கிய உணவு உருண்டைகள், பக்தர்களின் காலணியால் மிதிக்கப்படுகின்றன. இதனால், காரியம் செய்ததற்கான பலன் இம்மி அளவும் கிடைக்காது. அதனை மக்கள் உணர்ந்து, அங்கு காரியம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், சென்னை மாநகராட்சியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய, அனைத்து எரியூட்டு, தகன மையங்களிலும் இலவசமாக சேவையாற்றப்படுகிறது. ஆனால், இறந்தவர்களுக்கு காரியம் செய்ய, இங்கு ஆளுங்கட்சியினருக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இது ஆளுங்கட்சிக்கு மேலும் மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும். புனிதமான கோவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் இருந்து காரிய மண்டபத்தை உடனடியாக அகற்றி, இப்பிரச்னைக்கு மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். – -நமது நிருபர்- –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; குற்றாலநாதர் கோயில் சித்திரை சபையில் திருவாதிரை தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது.நடராஜர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து, உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான ... மேலும்
 
temple news
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே குழந்தை வரம் வேண்டி கோமாதாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ... மேலும்
 
temple news
மதுரை; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுசீந்திரம் தாணுமாலய  சுவாமி கோவில் மார்கழி திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்தி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar