Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி தாடாளன் கோவிலில் ... திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திருவொற்றியூர் கல்யாண வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரியில் நாளை நடக்கிறது ஸ்தோத்ர திரிவேணி பாராயணம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரியில் நாளை நடக்கிறது ஸ்தோத்ர திரிவேணி பாராயணம்

பதிவு செய்த நாள்

10 ஜன
2025
08:01

கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரியில், 50,000 பக்தர்கள் பங்கேற்கும், பிரமாண்டமான ஸ்தோத்ர திரிவேணி பாராயணம் நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி நடக்கிறது.


பொன் விழா; சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் சன்யாச ஆசிரம ஸ்வீகாரத்தின், பொன்விழா கொண்டாட்டம், கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்தோத்ர திரிவேணி பாராயணம் நடக்கிறது. இதில், தேவி ஸ்துதி, சிவ ஸ்துதி மற்றும் லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் ஸ்துதி என, மூன்று ஸ்தோத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதை, 50,000 பக்தர்கள் ஒரே குரலாக பாராயணம் செய்யவுள்ளனர். இந்நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி, கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரியில் நடக்கிறது. ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின், 36வது பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் உள்ளார். 2023 நவ., 10ம் தேதி இவர் சன்யாசத்தை மேற்கொண்ட 50வது ஆண்டு துவங்கியது. அப்போது, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள், ஓராண்டிற்கு பல்வேறு தார்மிக மற்றும் கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார். இதன்படி, வைதிக நிகழ்ச்சிகள், தர்ம காரியங்கள், கலாசார நிகழ்வுகள் நடந்து வருகின்றன. முதலாவதாக, 2023 அக்., நவ., மாதங்களில், சகஸ்ர மோதக கணபதி ேஹாமம், அதி ருத்ர மகாயாகம் மற்றும் சகஸ்ர சண்டி மகாயாகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிருங்கேரியில் உள்ள நரசிம்ம வனத்தில், 2024 ஆக., 5 முதல் 11 வரை, கிருஷ்ண யஜுர்வேத ஹவனம் நடத்தப்பட்டது.


புகைப்பட கண்காட்சி; அனைவருக்கும் கீதை, புராணங்களில் ஞானம், வேதாந்த பிரவேசம், வேதாந்த சிரவணம் போன்ற தலைப்புகளில், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் நடத்தப்பட்டன. சங்கர விஜயம் என்ற பெயரில், ஆதிசங்கரரின் வாழ்க்கை மற்றும் அவரது உபதேசங்களை மையமாகக் கொண்டு நடந்த விழாவில், பேச்சாளர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் குறித்த தர்மத்தின் உருவகம் என்ற புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது. இந்த மகோற்சவத்தின் நிறைவு விழா, வரும் ஏப்., 3ம் தேதி சிருங்கேரியில் நடக்கிறது - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் "கோவிந்தா,கோபாலா"கோஷம் முழங்க பரமபத வாசல் ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar