Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரியில் நாளை நடக்கிறது ... திருவாரூர் பக்தவத்சல பெருமாள் கோவிலில் வான வேடிக்கையுடன் சொர்க்கவாசல் திறப்பு திருவாரூர் பக்தவத்சல பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2025
08:01

திருவொற்றியூர்; மார்கழி மாதத்தை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் நிலையில் சென்னை திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தினமும் பக்தர்கள் இந்த மாதம் முழுவதும் விரதமிருந்து திருப்பாவை பெருமாள் உள்ளிட்ட  பாசுரங்களை பாடி  வந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளே  கோவிந்தா என சாமி தரிசனம் செய்தனர்.


சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது உற்சவர் ஸ்ரீ பவள வண்ணப் பெருமாள் பிரம்மாண்டமாக வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை எழுந்தருளி காட்சி அளித்தார் திருப்பாவை பாடல் பாடிய பின் பெருமாள் சன்னதியில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நுழைந்து நம்மாழ் வாருக்கு ஜடாரி பகுமானம் செய்து  பரிவட்டம் கட்டி ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கோவில் பகுதிக்கு வருகை தந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி கோவிந்தா பெருமாளே கோவிந்தா என பக்த முழக்கம் இட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதிகாலையில் பக்த்தர்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில்  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar