பரமக்குடி பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு;
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 11:01
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
மார்கழி மாதம் துவங்கி தினமும் காலை திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடப்படுகிறது. டிச. 31 பகல் பத்து உற்சவம் துவங்கி, நேற்று மாலை மோகினி அவதாரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று காலை 5:10 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் வஜ்ர கவசம், பாண்டியன் கொண்டை சூடி சர்வ அலங்காரத்துடன் பரமபத வாசல் வழியாக வந்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர். ஆடி வீதியில் வலம் வந்த பெருமாள் 6:10 மணிக்கு ஏகாதசி மண்டபத்தில் அமர்ந்தார். பின்னர் 11 மணிக்கு ஹோமங்கள் நடந்து அபிஷேகம், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு ராப்பத்து உற்சவம் துவங்கிய நிலையில், ஜன.19 வரை நடக்கிறது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்து மாலை சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
*பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக அருளினார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.