கொடைக்கானல் மலைப்பகுதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 02:01
கொடைக்கானல்; கொடைக்கானல் வரதராஜா பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. விழாவில் அதிகாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சப்ரத்தில் ஊர்வலம் வந்த சுவாமி சன்னதியை வந்தடைந்தார். தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி ராமர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. உற்சவர் சவுமிய நாராயணப் பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கருடன், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சவுமிய நாராயண பெருமாள் நகர்வலம் வந்தார். முன்னதாக அன்னதானம் நடந்தது.