திருவம்பாடி கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 02:01
பாலக்காடு; திருவம்பாடி கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருவம்பாடி கிருஷ்ணர் கோவில். இங்கு எல்லா ஆண்டு மார்கழி மாதம் ஏகாதசி உற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் இன்று நடை திறந்ததும் ஆரம்பித்தன. காலை 3:45 மணிக்கு நிர்மல்ய தரிசனம், 4:00 மூலவருக்கு வாகசார்த்து மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து 5:00க்கு அஷ்டபதி, 6:00க்கு விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம், 7:00க்கு நாராயணிய பாராயணம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 8:30 மணிக்கு சேராநெல்லூர் சங்கரன்குட்டி மாராரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொண்ட "பஞ்சாரிமேளம் என்ற செண்டை மேளம் முழங்க ஆடை ஆபரணங்கள் மற்றும் முத்துமணி குடைகள் சூடிய ஐந்து யானைகளின் அணிவகுப்பில் "உஷசீவேலி என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவம்பாடி சந்திரசேகரன் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 11:30 மணிக்கு நவகம், பஞ்சகவ்யம், ஸ்ரீபூதபலி, கேரளா பாரம்பரிய கலையான "ஓட்டன்துள்ளல் நடனம் ஆகியவை நடந்தது.