பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரை உற்ஸவம்; அம்மனுக்கு பொன்னூஞ்சல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2025 08:01
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்
பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஜன.4ல் மாலை சாயரட்சை பூஜைக்கு பின் திருவாதிரை உற்சவம் அம்மனுக்கு காப்பு கட்டி துவங்கப்பட்டது. இதில் (ஜன.12) நேற்று அம்மன் பொன்னூஞ்சலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது அம்மன் பொன்னூஞ்சலில் எழுந்தருளினார் 20 திருவாசகப் பாடல்கள் பாடி உற்சவம் நடைபெற்றது. அதன் பின் தீபாராதனை நடைபெற்றது பக்தர்கள் பலர் பங்கேற்றனர.