அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பட்டத்தரசியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாள் கணபதி பூஜை நடந்தது. மாலை புனித நீரால்,வாஸ்துஹோமம், ரஷாபந்தனம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து,விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. பட்டத்து அரசியம்மன், நூதன சக்தி விநாயகர், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று கிராமத்தினர் பங்கேற்றனர்.