பதிவு செய்த நாள்
01
டிச
2012
11:12
ஆத்தூர்: சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்குபூஜை நடந்தது. திருச்செந்தூர் பாரத திருமுருகன் திருச்சபை சார்பில் நடந்த பூஜையை மாநிலத்தலைவர் மோகனசுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட ஆலோசகர் கூட்டாம்புளி சீனிவாசகம் முன்னிலை வகித்தார். பூஜையை ஒட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், நந்திபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் முருகப்பெருமான், சொக்கநாதர், மீனாட்சிஅம்மன், நந்தி பெருமான், சைவகுரவர், 63 நாயன்மார்கள், அகத்தியர், சப்தகன்னியர் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. கோயிலைச்சுற்றி பக்தர்கள் கிரி வலம் வந்தனர். திருவிளக்கு பூஜையை ஒட்டி நடந்த அன்னதானத்தை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பூஜை நிகழ்ச்சியில் திருச்சபை மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், வட்டார கௌரவ ஆலோசகர் ஜெயலெட்சுமி, ஜெயகனி அம்மாள், திருச்செந்தூர் ஆலோசகர் அம்மமுத்து, மணிசாஸ்திரி, சேர்ந்தபூமங்கலம் அமைப்பாளர்கள் செல்வி, உடன்குடி பொறுப்பாளர்கள் பரமசிவன், நாராயணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.