பதிவு செய்த நாள்
03
டிச
2012
10:12
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லூரியில், சைவசித்தாந்தம் தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது. சைவசித்தாந்த அடிப்படைகள், சிவஞானபோதம், திருவருட்பயன், உண்மை விளக்கம் ஆகியன, ஆசிரியர்கள் ஆனந்தராஜன், ஞானபூங்கோதை, முத்தப்பன், அருணகிரி, சண்முகசுந்தரம், விஜயலட்சுமி பயிற்றுவித்தனர். சிவஞானசித்தியார், வினாவெண்பா, கொடிக்கவி, ஆலய வழிபாட்டின் உட்பொருள், தசகாரியம் ஆகிய பாடங்களை, ஆசிரியர்கள் சென்னியப்பன், மாணிக்கவாசகம், சண்முகம் பயிற்றுவித்தனர். நிறைவு விழாவுக்கு கல்லூரித் தலைவர் கருமுத்து கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் தாமரைச்செல்வன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஞானபூங்கோதை பங்கேற்றார்.