கொச்சி: கேரளாவில் முதல் கண்ணகி சிலை வடிவமைக்கப்பட உள்ளது.கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மதிலகத்தில் மாநிலத்திலேயே முதல் கண்ணகி சிலை வடிவமைக்கப்பட உள்ளது.கண்ணகி குறித்து 16-ம் நூற்றாண்டிற்கு முன்னரே இளங்கோ அடிகள்,தனது சிலப்பதிகாரத்தில் வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளார்.தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் கண்ணகியின் முதல் சிற்பம் கேரளாவில் அமையப்பட உள்ளது.