பதிவு செய்த நாள்
21
ஜன
2025
03:01
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் ஆண்டாள் கோஷ்டியினருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியின் கேசவ ராமானுஜர் பஜனை மடத்தில் கூடாரவல்லி வைபவம் மற்றும் பொங்கல் விழா நடத்தப்பட்டது. ஆண்டாள் கோஷ்டியினர் இணைந்து திருப்பாவை சேவித்து, பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், புஷ்பங்கள், தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து ரேவதி, ஜோதி, சாந்தி, ஆர்த்தி, சாஜிதா உள்ளிட்ட கேசவ ராமானுஜர் பஜனை மடத்தின் ஆண்டாள் கோஷ்டியினருக்கு புடவை, மஞ்சள், குங்கும சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வைஷ்ணவ கைங்கரிய டிரஸ்ட் வினோத், சுப்பிரமணியன், நாராயணன், நாகராஜ், தமிழ்ச்செல்வன், அருண், சந்தோஷ் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.