காட்டுப்பரமக்குடி முத்தையா, இருளாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2025 05:01
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி முத்தையா, இருளாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
காட்டுப்பரமக்குடி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இருளாயி அம்மன், முத்தையா கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, வருடாபிஷேக விழா நடந்தது. அப்போது விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, நவக்கிரக, லட்சுமி ஹோமங்களுடன், யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது. பின்னர் மகாபூர்ணாகுதிக்கு பிறகு தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் காட்டுப்பரமக்குடி கிராம நிர்வாகிகள், மகளிர் மன்றம், இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.