ஆதி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2025 05:01
கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தொண்டாலை மேலக்கரையில் உள்ள ஆதி அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு மூலவர்கள் ஆதி அடைக்கலம் காத்த அய்யனார், கருப்பண்ண சுவாமி, அம்மையார், சீலைக்காரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஹோம வேள்விகள் நடந்தது. பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை எஸ்.ஐ., (ஓய்வு) பாலகிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை விஜயராகவன் அய்யங்கார் குழுவினர் செய்தனர்.