பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனையையொட்டி நேற்று காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. அருகம்புல், நெற் பொறி, அஷ்டவர்கம் எனும் அவுல், பொறி, கடலை போன்ற பொருட்களை ஆவாஹனம் செய்தனர்.தாமரை, குங்குமம், வெற்றிலை போன்ற பொருட்களுடன் லஷ்மி ஹோமமும், ஹோம திரவியங்களுடன் கூடிய 108 சாஸ்தா காயத்ரி ஹோமமும், நவதானியங்களை கொண்டு நவக்கிரக பூஜையும், உபசாரம் நடத்தப்பட்டது. தீபாராதனையுடன் மகா கணபதி அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. சந்தனம், பன்னீர், விபூதி, இளநீர், எலுமிச்சை, மஞ்சள், அரிசிமாவு, லவங்கம், பல்வகை பழங்கள், தயிர், பால், கரும்புச்சாறு, சொர்ணம் உட்பட்ட 18க்கும் மேற்பட்ட அபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பஜனை பாடல்காள பாடி, சாமிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகளை பாலசுப்ர மணிய குருக்கள், வேதாச் சல சங்கர் குருக்கள் நடத்தினர்.