பதிவு செய்த நாள்
25
ஜன
2025
12:01
ஆரணி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சிறுவாபுரியில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே அகத்தீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், மேற்கண்ட கோவில்களில் நாளை, சுத்தம் செய்ய இருக்கின்றனர். அதை முன்னிட்டு, நாளை காலை, கோவில்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுத்தம் செய்யும் பணிக்கு மக்களும் பங்கேற்க, அழைப்பு விடுக்கும் விதமாக சிறுவாபுரி கிராமத்தில் வீதியுலா செல்ல இருக்கின்றனர். அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மேல், கோவில்களில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள் விபரம் அறிய, 98401 23866 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.