மகா கும்பமேளாவில் வானில் வர்ணஜாலம்; ட்ரோன் கண்காட்சி கண்டு பக்தர்கள் வியப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2025 12:01
பிரயாக்ராஜ்; உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 13ம் தேதி துவங்கிய பிரமாண்ட திருவிழாவில், இதுவரை 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சன்னியாசிகள், அகோரிகள், நாகா பாபாக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மகா கும்பமேளாவின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து, மாநிலத்தின் மிகப்பெரிய ட்ரோன் கண்காட்சி நேற்று மகா கும்பமேளா பகுதியில் தொடங்கப்பட்டது. புனித யாத்திரை நகரமான பிரயாக்ராஜின் புனித திரிவேணி கரையில் திவ்ய-கிராண்ட்-டிஜிட்டல் மகா கும்பத்தின் ஒரு அற்புதமான காட்சி காணப்பட்டது. கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான சங்கமத்தைக் கண்டு பக்தர்கள் வியந்தனர்.