புதுக்கோட்டை: பேரையூர் நாகநாத ஸ்வாமி திருக்கோவிலில், ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று பரிகார பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தோஷங்கள் நீங்க பரிகார பூஜைகள் செய்து, வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று பேரையூர் நாகநாத ஸ்வாமி திருக்கோவில். இங்கு ராகு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே அபிஷேகம், பரிகார பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தோஷம் நீங்க, பரிகார பூஜைகள் செய்து ராகு பகவானை வழிபட்டனர்.