பாளை.,சிவன் கோயிலில் 6ம் தேதி மகாதேவ (வைக்கத்) அஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2012 11:12
திருநெல்வேலி: பாளை.,திரிபுராந்தீஸ்வரர் (சிவன்) கோயிலில் மகாதேவ (வைக்கத்) அஷ்டமி விழா வரும் 6ம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் உள்ள மகாதேவர் கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் நடைபெறும். அந்த அன்னதானத்தின் போது, ஆயிரம் இலைகள் போடப்பட்டு 999 நபர்கள் எண்ணி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆயிரம் நபர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த அன்னதானத்தில் சுவாமியும் ஒருவராக அமர்ந்து சாப்பிடுவதாக ஐதீகம்.இந்த கேரள ஐதீகத்தின்படி பாளை.,திரிபுராந்தீஸ்வரர்(சிவன்) கோயிலிலும் ஆண்டுதோறும் மகாதேவ அஷ்டமி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 6ம் தேதி மகாதேவ (வைக்கத்) அஷ்டமி பாளை.,சிவன் கோயிலில் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகளும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு கோயில் வெளிப்பிரகாரத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பாளை.,திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.