சதுரகிரியில் தை பிரதோஷம், அமாவாசை வழிபாடு; ஜன.27 முதல் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2025 05:01
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம் அமாவாசை வழிபாட்டிற்கு ஜன.27ம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலைத்துறையினர் தெரிவித்தனர். இக்கோயிலில் ஜன.27ல் பிரதோஷ வழிபாடு, ஜன.29ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக நாளை முதல் ஜன.30 வரை 4 நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். எதிர்பாராமல் கனமழை பெய்தால் மட்டுமே பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.