Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ... வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்; உ.பி., அரசு தகவல்
எழுத்தின் அளவு:
மஹா கும்பமேளாவில் 15 நாட்களில் 14.12 கோடி பேர் புனித நீராடல்; உ.பி., அரசு தகவல்

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
10:01

உத்தர பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், தினமும் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள், புனித நீராட வருகை தருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கின்றன. இந்த இடத்தில், ஆண்டுதோறும் ‘மகாமேளா’ புனித நீராடுதல் நடக்கிறது. உத்தர பிரதேச மாநில மக்கள், இங்கு வந்து புனித நீராடிவிட்டு செல்வர்.


பொது விடுமுறை: இந்த ஆண்டு நிகழ்வானது, 12 பூரண கும்ப மேளாவுக்கு பிறகு, அதாவது, 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும். திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்ப மேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளா துவங்கியதில் இருந்து நேற்று மாலை வரை, 14.12 கோடி பேர், புனித நீராடி உள்ளனர். நேற்று மட்டும், ஒரே நாளில், 91.15 லட்சம் பேர் புனித நீராடினர். உத்தர பிரதேச அரசு தினமும், எதிர்பார்த்ததை விட, 15 முதல், 20 சதவீதம் மக்கள் கூடுதலாக வருகின்றனர். இதனால், மஹாகும்பமேளா நடக்கும் பிரயாக் ராஜில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளே காணப்படுகின்றன. புனித நீராட 45 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல், 15 நாட்களில், 31.35 சதவீதம், அதாவது 14.12 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். 


நாளை மவுனி அமாவாசை என்பதால், அன்று மட்டும், ஒரே நாளில், 10 கோடி பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புனித நீராடும் மக்களின் உயிர், உடைமைகள் போன்றவற்றுக்கு, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


இது குறித்து, பிரயாக்ராஜ் கூடுதல் போலீல் கமிஷனர் கொளஞ்சி கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மஹா கும்பமேளாவில் புனித நீராட, மக்கள் வந்தபடி உள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., படை தவிர மற்ற அனைத்து பிரிவினரும், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கண்காணிப்பு கேமரா; மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரயாக்ராஜ் எல்லையில் துவங்கி புனித நீராடும் இடங்கள் வரை, 24 மணி நேரமும், பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன. சிறு பிரச்னை ஏற்பட்டாலும், அடுத்த நிமிடமே, அந்த இடத்துக்கு பாதுகாப்பு படையினர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar