Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ... தை அமாவாசை; விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அன்னாபிஷேகம் தை அமாவாசை; விளமல் பதஞ்சலி மனோகரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக சதசண்டி யாகம்; காஞ்சி விஜயேந்திரர் வழிபாடு
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக சதசண்டி யாகம்; காஞ்சி விஜயேந்திரர் வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
01:01

திருவண்ணாமலை  கிரிவலப்பாதையில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை பேரிடர்கள் நீங்கவும் சதசண்டி யாகம் நடந்தது. ஏழு நாட்கள் நடந்த யாகத்தில் 20க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர். இந்த சதசண்டி யாகத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வழிபாடு நடத்தினர்.


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மகா திரிபுரசுந்தரீ சமேத ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடைபெற்றது. காஞ்ச காமகோடி பீடத்தினை ஆதிசங்கரர் தொடங்கி 70 பீடாதிபதிகள் அலங்கரித்துள்ளனர். தற்போது 70 வது பீடாதிபதியான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் திருவண்ணாமலை காஞ்சி மடத்தின் கிளையில் தங்கியிருந்து தினந்தோறும் காலை, மாலை உலக நன்மை வேண்டி ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்து வருகிறார். உலகம் முழுவதும் சுபிட்சம் மற்றும் அமைதி ஏற்படவும், இயற்கை சீற்ற இடர்பாடுகள் அறவே நீங்கவும் வேண்டி சதசண்டி ஹோமங்கள் கடந்த 22ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற 12 கால யாக பூஜையில் கடந்த 22ம் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி கடந்த 6 நாட்களாக 11 கால யாக பூஜை நடைபெற்று. இன்று 20க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு 108 மூலிகைகளை கொண்டு 12-ம் கால பூஜை நடத்தி சதசண்டி யாகம் நடத்தி பூர்ணாஹூதி செய்தனர். இந்த சதசண்டி யாகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar