Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் புரந்தரதாசரின் ஆராதனை ... திருப்பதி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை திருப்பதி நோக்கி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜர் வனபோஜன உற்சவம்; களக்காட்டூரில் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜர் வனபோஜன உற்சவம்; களக்காட்டூரில் விமரிசை

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
03:01

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான வனபோஜன உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. உற்சவத்தையொட்டி, இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், மேனா பெட்டியில் எழுந்தருளி, கோவிலில் இருந்து புறப்பாடாகி, களக்காட்டூர் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக உலா வந்து அருள்பாலித்தார். சுவாமியை வரவேற்கும் விதமாக, களக்காட்டூரில் வீடுதோறும் வாசலில் வண்ணமயமான கோலமிடப்பட்டு, வீதிகளில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. வீடு வீடாக சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.


தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு, ஓரிக்கை மஹா பெரியவர் மணிமண்டபம் வழியாக பாலாற்றங்கரையில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹா தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு நைவேத்யம் செய்த பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு, பாலாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம் வழியாக சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோட்டீஸ்வரர் தெரு செல்கிறார். அங்கு, சுவாமிக்கு மண்டகப்படி உற்சவம் நடந்து,  இரவு 7:00 மணிக்கு சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருளி, இரவு 7:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருளுகிறார். வனபோஜனம் உற்சவத்திற்கான ஏற்பாட்டை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar