Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரவை காமாட்சி அம்மன் கோயிலில் ... திருப்பரங்குன்றம் மலை மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுனையை மீட்க மனு திருப்பரங்குன்றம் மலை மேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பிப்.11 தெப்ப உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்; பிப்.11 தெப்ப உற்ஸவம்

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
04:01

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா இன்று (ஜன.31) கொடியேற்றத்துடன் துவங்கியது.


விழா நடக்கும் 12 நாட்களும் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். நேற்று காலை அம்மன், சுவாமி சிம்மவாகனத்திலும், இரவு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்மவாகனத்திலும் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.5ல் திருஞானசம்பந்தர் சைவ சமய வரலாற்று லீலை, பிப்.7 வலைவீசி அருளிய லீலை, பிப்.8 ல் இரவு சப்தாவரணம், பிப்.9 ல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.10ல் சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவை தொடர்ந்து, பிப்.11ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று அதிகாலை அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் வருவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும். காலை இரு முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பின்னர் இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவர். அன்று சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar