Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ... மாதா அமிர்தானந்தமயி தேவி கோவை வருகை பந்தக்கால் நடும் விழா மாதா அமிர்தானந்தமயி தேவி கோவை வருகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுனையை மீட்க மனு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலை மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுனையை மீட்க மனு

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
04:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் தர்கா நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள சுனையை மீட்க கோரி சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணனிடம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சோலை கண்ணன் மனு அளித்தார்.


அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான முருகப்பெருமான் மலைமீது 11க்கும் மேற்பட்ட சுனைகள் உள்ளன. அனைத்தும் புனித தீர்த்தங்கள் அடங்கியவை. அதில் தர்காவிற்கு கீழ்ப்பகுதியில் உள்ள சுனையை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பியும், இரும்பு வேலி அமைத்தும் தர்கா நிர்வாகம் சுனை முழுவதையும் ஆக்கிரமித்து, ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா குடிநீர் என போர்டும் வைத்துள்ளனர்.‌ இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுனையை ஆக்கிரமித்து அபகரிக்கும் முயற்சியில் தர்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுவும் எதிர்காலத்தில் பெரிய சர்ச்சையாகவும், பிரச்னையாகவும் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது.‌ எனவே புராண காலத்து வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான சுனையை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்கவும், கோயிலுக்கு சொந்தமான சுனையை வேண்டுமென்றே திட்டமிட்டு ஆக்கிரமித்து, அபகரிப்பில் ஈடுபட்ட தர்கா நிர்வாகத்தின் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கவும், மலை மீதுள்ள அனைத்து சுனைகளையும் கோயில் நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன். துணை கமிஷனர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர், தொல்லியல் துறை, ஆர்.டி.ஓ., தாசில்தார், மதுரை போலீஸ் கமிஷனர் திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர், அறநிலையத்துறை கமிஷனருக்கும் புகார் மனு பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிர்வாகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar