கோவை கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் தியாகபிரம்ம கானாஞ்சலி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 08:02
கோவை; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், 71வது ஆண்டு தியாகபிரம்ம கானாஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், நேற்று மாலை 5:15 மணிக்கு பிரம்ம கேசவ கனபாடிகள் குழுவினரின் வேத கோஷம், கோஷ்டி கானம் நடந்தது. தொடர்ந்து, விஜய்சிவா மற்றும்இசை குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய்சிவாவின் பாட்டும், திருவனந்தபுரம் சம்பத்தின் வயலின் இசையும், திருச்சி ஸ்ரீ சங்கரின் மிருதங்கம் இசையும், ஆலத்துார் ஸ்ரீ ராஜகணேசின் கஞ்சிராவும், இசை ஆர்வலர்களின் கைதட்டலை பெற்றன. இன்று மாலை 4:15 மணிக்கு, ஸ்ரீ அஸ்வத் நாராயணன் குழுவினரின் பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம் நடக்கிறது.