பதிவு செய்த நாள்
01
பிப்
2025
08:02
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) நேற்று அங்குரார்ப்பணம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது.
ரங்கநாதருக்கு ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. இவ்விழா ராமர் நடத்திய விழா என்பதால், பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமரே நடத்துவதாக ஐதீகம். ஸ்ரீரங்கம் கோயிலில் மிக முக்கிய விழாவான “பூபதி திருநாள்” என்றழைக்கப்படும் தைத்தேரோட்டம் விழாவை முன்னிட்டு ஸ்தம்ப ஸ்தாபனம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை, உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முஹூத்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. இதில் கோயில் இணைஆணையர் மாரியப்பன், ஆஸ்தான பட்டர் சுவாமிகள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தை மாதம் 21-ம் தேதி 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கும் விழாபதினொன்றாம் திருநாளில் 12.02.2025 புதன்கிழமை ஆளும் பல்லக்கு விழாவுடன் முடிவடையும். பதினொன்று நாட்கள் நடைபெறும் இந்த பூபதித் தை திருநாளில் தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பூபதித் திருளானின் ஒன்பதாம் திருநாளான தை மாதம் 28-ம் தேதி 10.02.2025 திங்கள்கிழமை “தைத்தேர்” வைபத்தை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தைத்தேர் மண்டபம் சென்றடைகிறார். பின்னர் 4.30 மணி முதல் 5.15 வதை ‘ரதரோஹணம்’ தனுர் லக்னத்தில் நடைபெறுகிறது. திருத்தேர் வடம் பிடித்த்ல் வைபவம் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து தேரானது நிலை வந்தடையும்.