திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 08:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் நேற்று வருகை தந்தார். பின்னர் அங்குள்ள சம்பந்த விநாயகர் சன்னதி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர், கோவில் குருக்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். முன்னதாக திருவண்ணாமலையில் உள்ள சங்கர மடத்திற்கு வருகை தந்துள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசினார்.