சிங்கம்புணரி பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2025 08:02
சிங்கம்புணரி; சிங்கம்புணரி நாடார் பேட்டை பத்திரகாளியம்மன் கோயிலில் தை வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். வழிபாட்டு க்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடார் மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.