பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
பழநி: உலக நலன், அமைதி செழுமை வேண்டி பெரியாவுடையாருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. பழநி, சண்முக நதிக்கரையில் அமைதியான சூழலில் பழநி கோயிலின் உபகோயிலான பெரியாவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு, சிறப்புஹோமமும் நடந்தது. உச்சிகாலத்தில் பெரியாவுடையாருக்கு சங்காபிஷேகமும், சோடஷ அபிஷேகம் நடந்தது. நாகாபரணம் அணிவிக்கப்பட்டிருந்தது. சிவன், பார்வதி, ரிஷப வாகனத்தில் உட்பிரகாரம் சுற்றி வந்தனர். சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேலு, ராகவன், செந்தில், திரைப்பட அரங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் நடராஜன், பேஷ்கார் நாராயணன், ராஜேந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 108 சங்காபிஷேகம் சித்தனாதன் சன்ஸ் உபயமாக நடந்தது.