பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
தேனி: தேனியில் கணேச கந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள ஸ்ரீ கணேச கந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா, கோயில் டிரஸ்ட் தலைவரும், தொழில் அதிபருமான கே.காளிராஜ் தலைமையில் நடந்தது. சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சவுந்திரராஜ பெருமாள், வள்ளி குஞ்சரி வடிவழகர், கன்னி மூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சக்கரத்தாழ்வார்,ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், பைரவர், லட்சுமி நாராயண பெருமாள் தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், தேனி கம்மவார் சங்க உறுப்பினர்கள் பி.பாண்டியராஜ், மன்னர்சாமி, வெஸ்டன் ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், பருப்பு மில் தொழிலதிபர் சந்திரகுமார், சரவணாஸ் டிபார்ட்மென்டஸ் ஸ்டோர் காமராஜ், திருமால் அழகு டிராவல்ஸ் வெங்கடேசன், டாக்டர்கள் எத்திராஜ், ராஜ்குமார், தியாகராஜன், மகேஸ்வரி ஜவுளி ஸ்டோர் ஆனந்தன், ரேணுகா ஏஜென்சி மகேஷ்,கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர்ராஜ். அகில ஜூவல்லரி தண்டபாணி, சொர்ணமாளிகை வெங்கடேஸ்வர பாபு, ஸ்ரீநிவாச என்டர் பிரைசஸ் வெங்கடேசன், நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி செயலாளர் ராஜமோகன், கம்மவார் சங்க கலை அறிவியல் கல்லூரி செயலாளர் தாமோதரன், தேனி வைகை அரிமா சங்க பட்டய தலைவர் பார்த்திபன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.