காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 10:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி திதியன்று, ரதசப்தமி உற்சவம் நடைபெறும். அதன்படி, ரதசப்தமியான நேற்று காலை 6:30 மணிக்கு பெருமாள், திருமலையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து மலர் அலங்காரத்தில், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு கண்ணாடி அறையில் உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில், சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.