பதிவு செய்த நாள்
05
பிப்
2025
02:02
பொங்கலூர்; அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து கட்டளைதாரர்களால் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நடத்தப்படுகிறது. வரும் பிப்., 10 ல் திருக்கல்யாண உற்சவம், பிப்.,11 செவ்வாய் காலை, 6:00 மணிக்கு சுவாமி தேர் ஏற்றம், மதியம், 12:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. பிப்.,12-ல் பரிவேட்டை , 13 ல் சுவாமி திருவீதி உலா, 14 ல் தரிசனம், மஞ்சள் நீராடல், அன்னதானம் நடக்கிறது.