செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழா நடைபெற்றது. செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி திருவிழா நடைபெற்று வருகின்றது. இதன்படி நேற்று ஒரே நாளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 7 வாகனங்களில் ரங்கநாதர் வீதி உலா நடந்தது. காலை 6 மணிக்கு சூரிய பிரபையிலும், 8 மணிக்கு சேஷா வாகனத்திலும், 10 மணிக்கு கருட வாகனத்திலும் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், 1 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4 மணிக்கு யானை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் ரங்கநாதர் மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது திரளான பக்தர்கள் ரங்கநாதருக்கு வரவேற்பளித்தனர். இதில் மஸ்தான் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.