திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் யாகசாலை பூர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 05:02
கடலுார்; திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், யாகசாலை பூர்த்தி விழா நடந்தது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில், கடந்த 2ம் தேதி கும்பாபிேஷக விழா நடந்தது. இக்கோவிலில், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதியான ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகள் வந்து, யாகசாலை துவங்கி, கும்பாபிேஷகம் வரை பங்கேற்றார். பின், கடந்த 3ம் தேதி தேவநாதசுமி கோவிலில் மங்களாசாஸனம் செய்தார். தொடர்ந்து, 4ம் தேதி ரத ஸப்தமியன்று, தேவநாதசுவாமி கோவிலில் இருந்து உற்சவர் சுவாமி மற்றும் ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகள் புறப்பட்டு வீதியுலா முடிந்து மலையில் ஹயக்ரீவர் கோவிலுக்கு சென்று, மங்களாசாஸனம் செய்தார். தொடர்ந்து, நேற்று யாகசாலை பூர்த்தியாகி, ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.