ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2025 05:02
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். 2015ல் பெய்த மழையில் திருமுக்குளம் நிரம்பியதால் 2016ல் தெப்பத்திருவிழா நடந்தது. அதன்பின் போதிய மழை பெய்யாததால் 8 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடக்கவில்லை. 2023 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் திருமுக்குளம் நிரம்பியதால் 2024 பிப். 24, 25,26 தேதிகளில் தெப்பத்திருவிழா 3 நாட்கள் நடந்தது. தற்போது திருமுக்குளத்தில் தண்ணீர் மட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருந்த போதிலும் இந்த ஆண்டும் தெப்பத்திருவிழா நடத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் கூறியதாவது, திருமுக்குளத்தில் தற்போது தண்ணீர் உள்ள நிலையில் வழக்கம்போல் தெப்பத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.