தொரப்பள்ளி ராமர் கோவில் திருவிழா; சிறப்பு அலங்கார வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 03:02
கூடலூர்; கூடலூர் தொரப்பள்ளி, ஸ்ரீ ராமர் கோவில் 27ம் ஆண்டு திருவிழா இன்று சிறப்பாக நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பள்ளி உணர்த்தல், 4:15 மணிக்கு நிர்மாலய தரிசனம், அபிஷேகம், ஆராதனைகள், 5:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6:30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், வழிபாடு பூஜைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு ராமாயண பாராயணம் நிகழ்ச்சியும், பறை எடுத்தல், நிகழ்ச்சி நடந்தது. காலை 11:30 மணிக்கு மதிய பூஜை, நிவேத்தியம் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3:30 மணிக்கு நடைதிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளில் கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.