மகா சிவராத்திரி ஜோதிலிங்க ரத ஊர்வலம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2025 09:02
பொள்ளாச்சி: மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாயம் சார்பில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற மூன்று ஜோதிலிங்கங்கள் சுவாமிகளை பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் ரத ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத்தில் பிரத்தி 12 லிங்கங்கள் ஜோதி லிங்கங்களாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் சென்று பார்க்க இயலாது. நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஜோதிலிங்கங்களை பொதுமக்கள் தரிசனம் செய்யும் வகையில் சோமநாத், கேத்தரிநாத், ராமேஸ்வரம் திருத்தலங்களில் காட்சி தரும் மூன்று முக்கிய ஜோதி லிங்கங்களை ரத்தத்தில் அலங்கரித்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தை நகர மன்ற தலைவர் சியாமளா கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் தொடங்கிய இந்த ரத ஊர்வலம் ரவுண்டானா,பல்லடம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் நிறைவடைந்தது. ரத ஊர் வலத்தில் ஜெண்டை மேளம் முழங்க வந்த ஜோதிலிங்கங்களை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.