திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2025 09:02
திருச்சி; திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தைதெப்போற்சவத்தின் 8ம் திருநாளில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் ராஜ பல்லக்கிலும் வீதிஉலா வந்து அருள்பாலித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமானதும், கோச்செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். சிறப்புவாய்ந்த திருக்கோவிலில் தைதெப்போற்சவம் கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை தெப்ப உற்சவத்தின் 8ம் திருநாளான இன்று இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் ராஜ பல்லக்கிலும் எழுந்தருளி தீபாராதனைக்கு பின்னர், மேளதாளம் மற்றும் சிவவாக்கியங்கள் முழங்க, நான்காம் பிரகாரத்தில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் நின்றிருந்த திரளான பக்தர்கள் சுவாமி, அம்பாளை மனமுருகதரிசித்தனர். முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழாவானது வருகிற பிப்ரவரி 10ம் தேதி ராமர் தீர்த்தக் குளத்தில் நடைபெற உள்ளது.