மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 12:02
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (10ம் தேதி) திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 11ம் தேதி தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.