மேல திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தை தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 01:02
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் மொண்டிபாளையத்தில் உள்ள மேல திருப்பதி என்னும் வெங்கடாஜலபதி கோவிலில் தை தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்சசியில் கோவை. அன்னூர். புளியம்பட்டி, சத்தியமங்கலம், அவிநாசி,பல்லடம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.