பதிவு செய்த நாள்
05
டிச
2012
11:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. பல மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ளனர். கோவில் வளாகத்தில் கல்வெட்டுகளும் உள்ளன. கோவில் கருவறை மேற்கு பார்த்து இருப்பதால், "மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் தேர்த்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. கணபதி வேள்வி மற்றும் கொடியேற்றம் 19ம் தேதி காலை நடக்கிறது. 20ம் தேதி காலை, சுவாமி சூரிய வாகனத்திலும், மாலை சந்திர வாகனத்திலும் உலா வருதல் நடக்கிறது. பூத வாகனத்தில், 21ம் தேதி மாலையும், புஷ்ப பல்லக்கில் 22ம் தேதி மாலையும் சுவாமி உலா நடக்கிறது.விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் ஊர்வலம் 23ம் தேதி இரவு நடக்கிறது. 24ம் தேதி காலை 10.00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், மதியம் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. மாலையில் சுவாமி யானை வாகனத்தில் உலா நடக்கிறது. 25ம் தேதி காலை சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், அகிலாண்டேஸ்வரி சன்னிதானம் அரங்கநாதசாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், அவிநாசி ராஜசரவண மாணிக்கவாசக அடிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அதிகாரிகள் தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் வழக்காடு மன்றம் நடக்கிறது. குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா 26ம் தேதி மாலையும், தெப்போற்சவம் 27ம் தேதி மாலையும் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக்கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.