அயோத்தியில் குவிந்த பக்தர்கள்; சிருங்கேரி விதுசேகர பாரதி சுவாமிகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 12:02
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சிருங்கேரி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திருக்கு வருகை தந்தார். அவர் பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரின் 108 நாமங்களை பாராயணம் செய்து பிரார்த்தனை செய்தார், பின்னர் மந்திர் வளாகத்தை ஆய்வு செய்தார்.