திருவண்ணாமலை : தைப்பூசம் முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான குளத்தில், அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி, கலச அபிஷேகம் நடந்தது.
தை பூசத்தையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.