அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் உள்ள வெக்காளியம்மன், பாண்டி முனீஸ்வரர் கோயில் 13ம் ஆண்டு களரி விழா 3 நாட்கள் நடந்தது பிப்.,4ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். முதல் நாள் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மஹா தீபாராதனை நடந்தன. மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள், நிர்வாகி தனம் அம்மாள் குடும்பத்தார் செய்திருந்தனர்.