விக்கிரம பாண்டீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 10:02
ராஜபாளையம்; ராஜபாளையம் அருகே சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோயிலில் புதிய ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை விழா நடந்தது. ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள சோழபுரம் விக்ரம பாண்டீஸ்வரர் கோயிலில்ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்பாள், சோமஸ்கந்தர், காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர் உற்ஸவர் சிலைகள் புதிதாக அமைக்கப்பட்டு பிரதிஷ்டை விழா நடந்தது. முன்னதாக சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. வேதபாராயணம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடைபெற்றது.