ராயபாளையம் மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 11:02
அவிநாசி; ராயம்பாளையம் ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்ப சுவாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பூச்சாட்டு விழாவில் கடந்த மாதம் 29ம் தேதி கொடிவேரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொட்டுச்சாமி பொங்கல், படைக்கலம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் உள்ளிட்டவைகளுடன் அபிஷேக பூஜை மற்றும் கிடாய் வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது.