சென்னை - சென்னை, மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35வது பிரம்மஸ்தான ஆண்டு விழா, பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள இம்மாதம், மாதா அமிர்தானந்தமயி தேவி சென்னை வருகிறார். பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில், காலை 11:00 மணியளவில் மாதா அம்ருதானந்தமயி மடத்தில் இந்நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடைக்கு வருகைப்புரிந்து, தொடர்ந்து அவரது வழிகாட்டுதலின் படி தியானம், பஜனை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனைகள் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அம்மாவின் தரிசனம் நடைபெறும். இரண்டு நாள் நிகழ்ச்சியான இவ்விழாவின் ஒரு பகுதியாக, பிரம்மஸ்தானம் திருக்கோயிலில் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு (அன்னதானம்) வழங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு கரூரில் அமைந்துள்ள அம்ருதவித்யாலயம் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சியில் அம்மாவின் அருளுரை, தியானம் மற்றும் பஜனையைத் தொடர்ந்து தரிசன நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்று அம்மாவின் அருளாசி பெறலாம்.